"தெற்கு வங்காளத்தின் சிறுநீரகங்கள்" என்று அழைக்கப்படும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் ஆண்டுக்கு சுமார் 2.1% என்ற அளவில் வேகமாக சுருங்கி வருகின்றன.
இந்தச் சுருக்க விகிதம் உலக சராசரியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு மற்றும் இந்தியாவின் தேசிய சராசரியை விட சுமார் 1.5 மடங்கு அதிகம்.
1990 ஆம் ஆண்டில் 5,524.7 ஹெக்டேராக இருந்த 14 முக்கிய ஈர நிலங்களின் மொத்த பரப்பளவு 2025 ஆம் ஆண்டில் 1,700.2 ஹெக்டேராகக் குறைந்துள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
ஈர நிலங்கள் நீர் ஓட்டங்களை ஒழுங்குபடுத்தவும், நிலத்தடி நீரை மீள்நிரப்பவும், மீன் வளம் மற்றும் விவசாயத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன.
இந்த ஈரநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆக்கிரமிப்பு களைகள், வண்டல் படிவு மற்றும் மாசுபாடு காரணமாக கடுமையாக சீரழிந்து வருகின்றன.
14 ஈரநிலங்களில் 4 மட்டுமே இன்னும் செயல்பாட்டு நதி இணைப்புகளைக் கொண்டு உள்ளன என்பதோடுஇது நீர் இயக்கத்தையும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது.