TNPSC Thervupettagam

முறையான கண்காணிப்பு தாக்கப் பத்திரம்

November 21 , 2025 16 hrs 0 min 14 0
  • உலகளாவிய வானிலை மற்றும் பருவநிலைத் தரவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகின் முதல் பருவநிலை-நிதிப் பத்திரமாக முறையான கண்காணிப்பு தாக்கப் பத்திரம் தொடங்கப்பட்டது.
  • இந்தப் பத்திரம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முறையான கண்காணிப்பு நிதி வசதி (SOFF) மூலம் சுமார் 200 மில்லியன் டாலரை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது 30 குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளை உலகளாவிய அடிப்படைக் கண்காணிப்பு வலையமைப்பு (GBON) தர நிலைகளை பூர்த்தி செய்ய ஆதரிக்கிறது.
  • இதன் முடிவுகள் உலக வானிலை அமைப்பு (WMO) சுயாதீனமாக சரி பார்க்கப் பட்டு உள்ளதுடன், இந்த முன்னெடுப்பு ஆனது சர்வதேச அளவில் பகிரப்பட்ட வானிலை மற்றும் பருவநிலை அவதானிப்புகளில் ஐந்து மடங்கு அதிகரிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
  • கண்காணிப்பு இடைவெளிகளைப் பூர்த்தி செய்வது 5 பில்லியன் டாலர் மதிப்பிலான நேரடி வருடாந்திர நன்மைகளை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 160 பில்லியன் டாலர் வரையிலான மாபெரும் பொருளாதார ஆதாயங்களைப் பெற உதவும்.
  • இது UNEP, WMO மற்றும் UNDP ஆகியவற்றால் நிறுவப்பட்ட UN நிதியான முறையான கண்காணிப்பு நிதி வசதி (SOFF) என்ற அமைப்பால் வழி நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்