மத்திய நீர்வள ஆணையத் தலைவரை மேற்பார்வைக் குழுத் தலைவராக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
கண்காணிப்புக் குழுவின் தற்போதையத் தலைவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கருதியது.
முல்லைப் பெரியாறு வழக்கில் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் சட்டப் பூர்வ அதிகாரமானது, மேற்பார்வைக் குழுவிடம் தற்காலிகமாக மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரு மாநிலங்களிலிருந்தும் தலா ஓர் உறுப்பினர் அந்தக் குழுவில் சேர்க்கப்பட்டு, கண்காணிப்புக் குழு மேலும் பலப்படுத்தப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தக் குழுவை மறுசீரமைப்பதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.