TNPSC Thervupettagam

முழுமையான இயற்கை வேளாண்மைக்கான ஒன்றியப் பிரதேசம் - லடாக்

October 28 , 2026 3 days 97 0
  • இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மைக்கான ஒன்றியப் பிரதேசமாக லடாக்கை துணைநிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனா அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பானது லே மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன் செயற்கை உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளில் இருந்து படிப்படியாக மாறியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், விவசாயத்திற்காக ரசாயன மற்றும் செயற்கை உரங்களை கொள்முதல் செய்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல், சந்தைப் படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை லடாக் தடை செய்தது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதிக்குள் 207 கிராமங்கள் இயற்கை வேளாண்மைச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
  • முக்கிய இயற்கை வேளாண்மைப் பொருட்களில் பாதாமி (ஆப்ரிகாட்), சீ பக்ல்தார்ன், பக்வீட், பார்லி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும்.
  • தேசிய இயற்கை உற்பத்திக்கான திட்டம் (NPOP) இந்தியாவின் இயற்கை வேளாண்மைத் தரங்களை அமைக்கிறது. மேலும் இது வேளாண் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (APEDA) நிர்வகிக்கப் படுகிறது.
  • 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலமாக சிக்கிம் உருவானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்