TNPSC Thervupettagam

முழுமையான கடல்சார் இருவாழ்வி - ஜெரோதோராக்ஸ் மரிடிமஸ்

October 30 , 2026 14 hrs 0 min 41 0
  • அறியப்பட்ட முதல் முழுமையான கடல்சார் இருவாழ்வியான ஜெரோதோராக்ஸ் மரிடிமஸின் (Gerrothorax maritimus) இரண்டு முழுமையான தொல்லுயிர் படிமங்கள் சீனாவின் குய்சோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மெசோசோயிக் சகாப்தத்தின் பிற்பகுதி ட்ரயாசிக் காலத்தில் சுமார் 237 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழ்ந்துள்ளது.
  • இது இருவாழ்விகளின் பரிணாமப் பரம்பரையுடன் தொடர்புடைய, ஆரம்பகால நான்கு கால்கள் கொண்ட முதுகெலும்பிகளின் அழிந்துபோன குழுவான டெம்னோஸ்போண்டிலி (Temnospondyli) வகையைச் சேர்ந்ததாகும்.
  • இந்த இனத்திற்கு ஜெரோதோராக்ஸ் மரிடிமஸ் என்று பெயரிடப்பட்டது; "மரிடிமஸ்" என்பது அதன் கடல் வாழ்விடத்தைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்