முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் மத்திய இரயில் நிலையம்
September 28 , 2021 1415 days 763 0
புரட்சித்தலைவர் டாக்டர் M.G. ராமச்சந்திரன் மத்திய அல்லது சென்னை மத்திய இரயில் நிலையமானது இரயில் நிலையத்தின் நடைமேடைப் பகுதிகளின் கூரைகளில் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி மின்தகடுகள் மூலம் பெறப்படும் ஆற்றலைக் கொண்டு ஒரு நாளைக்குத் தேவையான முழு மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்துள்ளது.
இந்த இரயில் நிலையமானது தெற்கு இரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது.
இந்த நிலையத்தில் 1.5 MW அளவிலான சூரியசக்திக் கட்டமைப்பானது நிறுவப் பட்டு உள்ளது.
இந்திய இரயில்வே அமைப்பில் ‘ஆற்றல் நடுநிலைமை உடைய நிலையங்கள்’ என்றக் கருத்தினை முதன்முதலில் கொண்டு வந்தது தெற்கு இரயில்வே மண்டலமாகும்.