முதன்முறையாக இந்தியாவிலுள்ள பெண் காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் “பெண்களை மையமாகக் கொண்ட” உடல் பாதுகாப்புக் கவசம் அல்லது முழு உடல் பாதுகாப்புக் கருவியைப் (FBP - full body protector) பெறவிருக்கின்றனர்.
இது பல்வேறு அச்சுறுத்தல்களைத் தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது. இது கத்தியால் தாக்குவதிலிருந்து தப்பித்தல், கிழிசல் எதிர்ப்பு, தாக்கத்திலிருந்து தப்பித்தல், தீ மற்றும் அமிலத்தை எதிர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றது.
இது புது தில்லியில் உள்ள உடலியல் மற்றும் அது சார்ந்த அறிவியலுக்கான பாதுகாப்பு மையத்தினால் (DIPAS - Defence Institute of Physiology & Allied Science) மேம்படுத்தப்பட்டது.
DRDOவின் கீழ் இயங்கும் DIPAS அமைப்பு 1962-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது பல்வேறு தொழில்சார் சூழலில் உடலியல், உயிர் வேதியியல், ஊட்டச் சத்து மற்றும் பணிச்சூழலியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மனித செயல்திறனை மேம்படுத்துவதற்காக பணியாற்றுகின்றது.
DRDO ஆனது இப்பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான 5 உரிமங்களை வழங்கவிருக்கின்றது.