TNPSC Thervupettagam

முழு நீதிபதிகள் எண்ணிக்கை பலம் - உச்ச நீதிமன்றம்

February 13 , 2023 886 days 499 0
  • இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்த்தப் பட்டதன் மூலம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பலமானது தற்போது அதன் முழு எண்ணிக்கையான 34 ஆக உள்ளது.
  • இதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் தான் உச்ச நீதிமன்றம் தனது முழு பலத்துடன் செயல்பட்டது.
  • பாராளுமன்றம் ஆனது 1956 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) சட்டத்தினை இயற்றி, நீதிபதிகளின் எண்ணிக்கைக்கான அதிகபட்ச உச்ச வரம்பை நிர்ணயிப்பதற்காக அச்சட்டத்தினை திருத்தியுள்ளது.
  • 1956 ஆம் ஆண்டில் ஒரு தலைமை நீதிபதியுடன் சேர்த்து கூடுதலாக மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்த்தப்பட்டது.
  • இச்சட்டமானது, 1960 ஆம் ஆண்டில் 14, 1978 ஆம் ஆண்டில் 18, 1986 ஆம் ஆண்டில் 26, 2009 ஆம் ஆண்டில் 31 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 33 என உயர்த்தப்படுவதற்காக மேலும் பலமுறை திருத்தியமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்