முஸ்லீம் பெண்கள் (திருமணங்கள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019
August 1 , 2019 2114 days 742 0
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முஸ்லீம் பெண்கள் (திருமணங்கள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019ஐ நிறைவேற்றியுள்ளன.
இந்த மசோதாவை மக்களவையானது 25-07-2019 அன்றும் மாநிலங்களவையானது 30-07-2019 அன்றும் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது திருமணமான முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தங்களுடைய கணவர்கள் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் நடைமுறையைத் தடுப்பதற்கும் உதவும்.
இது எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வடிவிலோ உள்ளிட்ட அனைத்து வடிவிலான மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் செல்லாது என்றும் அது சட்ட விரோதம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த மசோதா இந்த நடைமுறையை மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக அறிவித்துள்ளது.
இதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையானது வழக்கை விசாரணை செய்யும் நீதிபதியின் தனிப்பட்ட முடிவாகும்.
இது திருமணமான முஸ்லீம் பெண்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கீடு மற்றும் பெற்றோரைச் சார்ந்துள்ள குழந்தைகளுக்கான நிதியுதவி ஆகியவை நீதிபதியினால் முடிவெடுக்க வழிவகை செய்கின்றது.
திருமணம் செய்வதிலிருந்துப் பருவம் அடையாத குழந்தைகளைப் பாதுகாக்க மனைவிக்கு உரிமை உண்டு என்று இந்த மசோதா கூறுகின்றது.
இது பிணையில் (ஜாமீன்) வெளியே வரமுடியாத ஒரு குற்றமாகும். இருந்தாலும், விசாரணை செய்யும் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை அளிப்பதற்கான ஒரு விதிமுறை இந்த மசோதாவில் உள்ளது.