2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட எத்தனால் ஆலையை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த ஆலையானது எத்தனால் உற்பத்திக்கு ஏற்ற அதிக செல்லுலோஸ் உள்ளடக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பால்கோ (பம்புசா பால்கூவா) மற்றும் துல்டா (பம்புசா துல்டா) வகை மூங்கிலைப் பயன்படுத்துகிறது.
இந்த ஆலையானது ஆண்டுதோறும் 48,900 மெட்ரிக் டன் எத்தனால், அசிட்டிக் அமிலம், ஃபர்ஃபுரல் மற்றும் உணவு தர திரவ கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.