பசுமை இந்தியா சவால் (GIC) முன்னெடுப்பானது, தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள முல்லகுட்டா 2 என்ற கிராமத்தில் ஒரு மூங்கில் தோட்டத்திற்கான சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவினரான (PVTG) கோலம் ஆதிவாசிகளின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வன வளங்களை அணுகுவதில் கட்டுப்பாடுகள் இருப்பதால் கோலம் பழங்குடியினர் எதிர்கொள்ளும் மூங்கில் பற்றாக்குறையை இது நிவர்த்தி செய்கிறது.
GIC நிறுவனர் சந்தோஷ் ஜோகினபள்ளி தலைமையிலான இந்த முன்னெடுப்பு, நிலையான மூங்கில் விநியோகம் மற்றும் மேம்பட்ட மூங்கில் கைவினைத்திறனில் பழங்குடியின கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.