மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையில் எந்திரப் பயன்பாடு
April 13 , 2023 986 days 431 0
சென்னையில் அமைந்துள்ள பிரசாந்த் மருத்துவமனை நிறுவனமானது, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையினை மேற்கொள்வதற்காக என்று மேம்படுத்தப் பட்ட நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த எந்திரத்தினைப் பணியமர்த்தியுள்ளது.
இந்தக் கருவியானது, சென்னையில் முதன்முறையாக பயன்படுத்தப் படுகிறது.
இதுவரை நான்கு நாடுகளில் மட்டுமே இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப் படுத்திய நான்காவது நாடு இந்தியா ஆகும்.
இந்த எந்திரங்கள் சிகிச்சையின் போதான வலி மற்றும் இரத்த இழப்பைக் குறைத்தது.
இதன் விளைவாக நோயாளிகள் தங்கள் கால்களில் ஏற்பட்டுள்ள ஒரு குறைபாட்டில் இருந்து வேகமாக குணமடைய முடியும்.