மூன்று ஆண்டு கால உலகளாவிய உச்சநிலை வெப்பம்- 2023/2025
November 11 , 2025 8 days 41 0
உலக வானிலை அமைப்பு (WMO) ஆனது, 2023–2025 ஆம் ஆண்டுகளானது இது வரை பதிவு செய்யப்பட்டவற்றுள் மிகவும் வெப்பமான மூன்று ஆண்டு காலக் கட்டமாக உறுதிப் படுத்தியது.
இந்தக் காலக் கட்டத்தில் உலக வெப்பநிலைத் தொழில்துறைக்கு முந்தைய கால அளவை விட சராசரியாக 1.4°C அதிகமாக இருந்தது.
ஆர்க்டிக் கடல் பனி அதன் மிகக் குறைந்த குளிர்கால அளவை எட்டிய அதே நேரத்தில் அண்டார்டிக் பனிப் பரவல் சராசரியை விட குறைவாகவே இருந்தது.
1990 ஆம் ஆண்டுகளில் ஆண்டிற்கு 2.1 மில்லி மீட்டராக இருந்த கடல் மட்ட உயர்வு 2016 முதல் ஆண்டுதோறும் 4.1 மில்லிமீட்டராக அதிகரித்தது.
2023–2024 ஆம் ஆண்டு வரையிலான பனிப்பாறை இழப்பு 450 ஜிகா டன்களை எட்டியது என்பதோடுஇது 1.2 மில்லிமீட்டர் கடல் மட்ட உயர்வுக்குப் பங்களித்தது.
கார்பன் டை ஆக்சைடு (CO₂) செறிவு 2024 ஆம் ஆண்டில் 423.9 பாகங்களுக்கு ஒரு மில்லியன் என்ற அளவினை எட்டியது என்பதோடுஇது தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட 53% அதிகரிப்பு ஆகும்.