TNPSC Thervupettagam

மூன்று புதிய கடற்படை போர்க்கப்பல்கள்

June 26 , 2026 6 hrs 0 min 49 0
  • இந்திய கடற்படை உள்நாட்டிலேயே கட்டப்பட்ட மூன்று போர்க்கப்பல்களை கொல்கத்தாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தது.
  • அவை ஐஎன்எஸ் துணகிரி, ஐஎன்எஸ் அக்ரே மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய போர்க் கப்பல்களாகும்.
  • ஐஎன்எஸ் துணகிரி என்பது கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்ட Project 17A ரேடாருக்குப் புலப்படாத போர்க்கப்பல் ஆகும்.
  • Project 17A வகைப் போர்க்கப்பல்கள் மேற்பரப்பு, வான்வழி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்களுக்காக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டு எறிகணைப் போர்க்கப்பல்களாகும்.
  • ஐஎன்எஸ் அக்ரே என்பது கடலோர நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் அர்னாலா-வகுப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர் கப்பலாகும்.
  • ஐஎன்எஸ் சன்ஷோதக் என்பது கடற்பரப்பு வரைபடமாக்கல் மற்றும் வழிசெலுத்தல் ஆதரவிற்காகப் பயன்படுத்தப்படும் சந்தாயக்-வகுப்பு நீரியல் வரைபடவியல் ஆய்வுக் கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்