TNPSC Thervupettagam

மூலதன ஆதாயக் கணக்குகள் (இரண்டாவது திருத்தம்) திட்டம், 2025

November 29 , 2025 6 days 52 0
  • இந்தத் திருத்தம், அதன் செயல்முறைகளை நவீனமயமாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் 1988 ஆம் ஆண்டின் மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை (CGAS) புதுப்பிக்கிறது.
  • இது 54GA பிரிவு (தொழிற்சாலைகளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலதன ஆதாயங்கள்) மற்றும் 54, 54B, 54D, 54F, 54G மற்றும் 54GB (மூலதன ஆதாய விலக்குப் பிரிவுகள்) ஆகிய பிரிவுகளைச் சேர்க்கிறது.
  • வைப்பு அலுவலகத்தின் வரையறையில் தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு வங்கியும் அடங்கும்.
  • UPI, உடனடி பண வழங்கீட்டுச் சேவை (IMPS), தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT), நிகழ்நேர பெருந்திரள் தீர்வு பரிமாற்ற வசதி (RTGS), இணைய வங்கி மற்றும் கடன் / பற்று அட்டைகள் போன்ற புதிய டிஜிட்டல் பண வழங்கீட்டு முறைகள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன.
  • மின்னணு கணக்குப் புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் கணக்கு அறிக்கைகள் ஆனது வைப்புத் தொகை, பணம் திரும்பப் பெறுதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு அனுமதிக்கப் படுகின்றன.
  • 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், கணக்கு மூடல் ஆனது டிஜிட்டல் வழி கையொப்பம் அல்லது மின்னணுச் சரிபார்ப்புக் குறியீட்டை (EVC) பயன்படுத்தி இயங்கலையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்