மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி உதவி
December 13 , 2024 221 days 182 0
மத்திய அரசானது தனது மூலதன முதலீட்டிற்கானச் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 50,571.42 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.
இது நடப்பு நிதியாண்டின் முதலாவது எட்டு மாதங்களில் பல்வேறு நல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
28 மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா ஆகியவை தவிர்த்து மற்ற 23 மாநிலங்கள், மத்திய அரசின் வட்டியில்லா நிதி உதவியைப் பெற்றுள்ளன.
இந்தத் திட்டம் ஆனது மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்காக வேண்டி மாநில அரசுகளுக்கு 50 ஆண்டு கால வட்டியில்லாக் கடன்களை வழங்குகிறது.