யுக்திமுறை பொதுப்பங்குகளை விற்பதற்கான புதிய வழிகாட்டுதலுக்கு ஒப்புதல்
August 18 , 2017 3080 days 1409 0
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் (Central Public Sector Enterprises - CPSEs) முதலீடுகளைத் யுக்திமுறையில் விற்பதைத் துரிதப்படுத்துதல் .
சமீபத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (Cabinet Committee on Economic Affairs) பொதுத்துறை நிறுவனங்களின் யுக்திமுறைப் பங்குகளை விற்பதற்கான முன்மொழிதலை ஏற்படுத்தவும், அதற்கான ஒப்புதல் அளிக்கவும் அமைச்சரவைக் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்ட அறிக்கையானது முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை மூலம் முன் மொழியப்பட்டடது (DIPAM)
நிதி அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் உறுப்பினர்கள், மேலாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரால் இந்த அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு வழி நடத்தப்படும்.
யுக்திமுறை பொதுப்பங்குகளை முதலீட்டு பரிவர்த்தனை முறைகளை விரைவில் முடிக்க இந்த ஒப்புதல் உதவும்.