மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மரியாதை வழங்கும் திட்டமானது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தில் மிகவும் கணிசமாக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்து உள்ளது.
உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதில் மாநில அரசு மேற்கொண்ட செயலூக்கமிக்க முயற்சிகளைப் பாராட்டுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப் பட்டதிலிருந்து 461 என்ற அளவிலான மாநில அரசு மரியாதைகள் வழங்கப்பட்டதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான முதல் வகையான அரசு உத்தரவு இந்தத் திட்டத்தில் ஒரு கணிசமான விளைவினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தானங்கள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகின.
உயிரிழந்த 268 உறுப்பு தானம் செய்தவர்களிடமிருந்து சுமார் 1,500 உறுப்புகள் மற்றும் திசுக்கள் மீட்டெடுக்கப்பட்டன என்பதோடு இது ஓராண்டில் ஒரு மாநிலத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
உயிரிழந்த நன்கொடையாளருக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் 'honour walk -மரியாதை நடைப் பயணம்', திட்டத்தின் அனைத்து கூறுகளுக்கும் நெறிமுறைகளை உருவாக்குதல், ஒவ்வொரு தானத்திற்குப் பிறகும் மையங்கள் / ஒருங்கிணைப்பாளர் நபர்களுக்கு தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) தனிப் பட்டப் பாராட்டுக் குறிப்பு மற்றும் பல நிலைகளில் அவ்வப்போதைய மதிப்பாய்வு ஆகியவற்றையும் DGHS குறிப்பிட்டது.
268 உறுப்பு தானம் செய்தவர்களிடமிருந்து சுமார் 863 முக்கிய உறுப்புகள், 637 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மீட்கப்பட்டு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.
முதல் முறையாக, அரசு நிறுவனங்களின் பங்களிப்பு தனியார் மருத்துவமனைகளை விட அதிகமாக இருந்தது (அரசு மருத்துவமனைகளில் இருந்து 54.48% மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 45.52%).
சுமார் 26 அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பு தானங்கள் நிகழ்ந்தன.
நீலகிரி மருத்துவக் கல்லூரி போன்ற தொலைதூரக் கல்லூரிகளிலிருந்தும் தானங்கள் வழங்கப்பட்டன.
உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாத உறுப்பு மீட்பு மையத்தின் பங்களிப்புகளும் அதிகமாக இருந்தன.
மொத்த தானங்களில் 16% ஆனது உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படாத உறுப்பு மீட்பு மையத்தின் பங்களிப்புகளில் இருந்து 43 தானங்கள் வழங்கப் பட்டன.