மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்தச் செயற்கை நரம்பிணைவுத் தொழில் நுட்பம்
February 6 , 2023 923 days 475 0
பெங்களூரின் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) அறிவியலாளர்கள் குழுவானது, மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்த, குறைந்த ஆற்றல் நுகர்வுடைய, அதிவேகத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்த ஒரு அமைப்பினை உருவாக்குவதற்காக, ஸ்காண்டியம் நைட்ரைடு என்ற உயர்நிலைத் தன்மை கொண்ட ஒரு குறைகடத்திப் பொருளை இக்குழு பயன்படுத்தியுள்ளது.
பாரம்பரியக் கணினிகளானது, தனியாக அமைந்த நினைவகச் சேமிப்பு மற்றும் செயலாக்க அலகுகளைக் கொண்டுள்ளன.
செயல்பாட்டின் போது இந்த அலகுகளுக்கு இடையில் தரவை மாற்றுவதற்கு அந்தக் கணினிகள் அதிகளவிலான ஆற்றலையும் நேரத்தையும் எடுத்துக் கொள்கின்றன.
இதற்கு நேர்மாறாக, மனித மூளையில் உள்ள சினாப்ஸ் (இரண்டு நியூரான்களுக்கு இடையிலான சந்திப்பு) ஆனது ஒரு செயலாக்க மற்றும் நினைவகச் சேமிப்புச் சாதனமாக செயல்படுகிறது.
இதுவே சிறியதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ள ஒரு சிறந்த உயிரியல் கணினியாக விளங்குகிறது.