TNPSC Thervupettagam
August 24 , 2026 11 hrs 0 min 23 0
  • அறிவியலாளர்கள் "மெகா-எர்த்" (மிகப்பெரிய பூமி) என வகைப்படுத்தப்பட்ட புறக்கோளான GJ 523b-ஐ கண்டறிந்துள்ளனர்.
  • இது பூமியைப் போல சுமார் 2.55 மடங்கு ஆரத்தையும், 23.5 மடங்கு நிறையையும், தோராயமாக 7.8 கி/செ.மீ³ அடர்த்தியையும் கொண்டுள்ளது.
  • இது 538 K என்ற மதிப்பிடப்பட்ட சமநிலை வெப்பநிலையுடன், ஒவ்வொரு 17.75 நாட்களுக்கு ஒருமுறை நடுத்தர-K குறுமீனை (mid-K dwarf star) சுற்றி வருகிறது.
  • நாசாவின் TESS (கடப்பு புறக்கோள் ஆய்வு செயற்கைக்கோள்) விண்கலத்தின் கடப்புக் கால உற்றுநோக்கல்கள் மற்றும் WIYN 3.5-மீட்டர் தொலைநோக்கியில் உள்ள NEID நிறமாலைமானியிலிருந்து (spectrograph) பெறப்பட்ட ஆரத் திசைவேக அளவீடுகளைப் பயன்படுத்தி இதன் பண்புகள் தீர்மானிக்கப்பட்டன.
  • "மெகா-எர்த்" என்பது குறைந்தபட்சம் 2.1 பூமி ஆரமும் குறைந்தது 5.5 கி/செ.மீ³ அடர்த்தியும் கொண்ட பாறைகளால் ஆன புறக்கோளாகும்.
  • இந்தக் கோள் அமைப்பு சுமார் 169 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப் பட்டுள்ளது; இத்தகைய ஒரு கோள் தடிமனான வாயு உறையை (gas envelope) உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு, இதன் வழக்கத்திற்கு மாறான பாரிய பாறைத் தன்மை சவாலாக அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்