மெக்காலேயின் 1835 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை குறித்து பிரதமர் கருத்து
November 21 , 2025 16 hrs 0 min 11 0
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது இராம்நாத் கோயங்கா சொற்பொழிவில், இந்தியாவின் கல்வி முறையில் தாமஸ் மெக்காலேயின் 1835 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையின் தாக்கம் குறித்து பிரதமர் உரையாற்றினார்.
இந்தக் கொள்கையானது ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்தி, நிதியை முழுமையாக ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலுக்கு மாற்றியது.
இந்தக் கொள்கையானது கிழக்கத்தியக் கல்லூரிகளை மூட உத்தரவிட்டது மற்றும் பாரம்பரிய இந்தியக் கற்றலுக்கான அரசாங்க ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்தது.
மெக்காலேயின் "Downward Filtration Theory" (பெருமளவிலான அடித்தட்டு மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம்) மக்களுக்கு கல்விக் கற்பிக்கும் ஒரு சிறிய குறிப்பிட்ட உயர அடுக்கினருக்கு மட்டுமே கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த அணுகுமுறை இந்தியாவின் உள்நாட்டு அறிவு மரபுகளைப் பலவீனப்படுத்தியது மற்றும் பல தசாப்தங்களாக காலனித்துவ கல்வியை வடிவமைத்தது என்று பிரதமர் கூறினார்.