கோசுமெல் தீவு மற்றும் பான்கோ சின்சோரோவின் பவளப்பாறைத் தீவு ஆகியவற்றில் (அட்டோலிலும்) முறையே இதுவரை கண்டறியப்படாத இரண்டு முதலை இனங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த இனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000க்கும் குறைவான இனப்பெருக்க எண்ணிக்கையினைக் கொண்டுள்ளன.
இது மேற்கத்திய நாடுகளில் (New World) உள்ள முதலை இனங்களின் எண்ணிக்கையை 4லிருந்து 6 ஆக உயர்த்துகிறது.
அமெரிக்கன், மோர்லெட்ஸ், கியூபன் மற்றும் ஒரினோகோ ஆகிய முதலை இனங்கள் இதற்கு முன்னர் அறியப் பட்ட முதலை இனங்கள் ஆகும்.