TNPSC Thervupettagam

மெட்ராஸ் முள்ளெலி பாதுகாப்புத் திட்டம்

October 25 , 2026 14 hrs 0 min 50 0
  • தென்காசி வனக்கோட்டமானது மெட்ராஸ் முள்ளெலியைப் பாதுகாப்பதற்காக பொன்னிறக் குள்ளநரி வளங்காப்புத் தூதர்கள் திட்டத்தை விரிவுபடுத்த முன்மொழிந்துள்ளது.
  • மெட்ராஸ் முள்ளெலி (பாராயெச்சினஸ் நுடிவென்ட்ரிஸ்) என்பது தென்னிந்தியாவில் காணப்படும் ஓர் இரவுநேர, முள்ளுள்ள பாலூட்டியாகும், இது IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (LC) இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் ஊத்துமலை பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வனத்துறையினரால் புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெட்ராஸ் முள்ளெலி மற்றும் பிற வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு தெரிவிக்க மாணவர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
  • வனவிலங்கு விழிப்புணர்வை ஆதரிக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வனக்காவலர் சகோதரன் / வனக்காவலர் சகோதரி பரிந்துரைக்கப்படுவார்கள், அதே நேரத்தில் கிராம வனக்குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்