மத்திய அரசு “மெட்ரோலைட்” என்ற பெயர் கொண்ட ஒரு சிறு நகர இரயில் போக்குவரத்து அமைப்பைப் பரிந்துரைத்துள்ளது.
இது குறைந்த அளவு பயணத் தொலைவுள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றது.
ஒவ்வொரு இரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோ மீட்டர் அளவாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
நிலத்தின் மேற்பரப்பு மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் இந்த “மெட்ரோலைட் அமைப்பின்” தர அம்சங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வழங்கியுள்ளது.
மெட்ரோலைட் அமைப்பு தானியங்கி கட்டண வசூலிப்புக் கதவுகள், நடைமேடை திரை வாயில்கள், எக்ஸ் கதிர் மற்றும் உடமைகள் வருடி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.