மெத்தில்கோபாலமின் குறித்த FSSAI அமைப்பின் தெளிவாக்கம்
January 8 , 2025 371 days 310 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆனது, B12 வைட்டமினின் ஒரு வடிவமான இந்த மெத்தில்கோபாலமினை, உடல்நலத்திற்கான ஊட்டக் குறைநிரப்பு மருந்துகள், மருத்துவ நோக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துப் பொருட்களில் பயன்படுத்துவது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான FSSAI விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட வைட்டமின் B12 வடிவங்களில் தற்போது சயனோகோபாலமின் மற்றும் ஹைட்ராக்ஸோகோபாலமின் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் B12 என்பது ஒரு முக்கியமான நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும் என்பதோடு இது டிஎன்ஏ தொகுப்பு, இரத்தச் சிவப்பணு உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒன்றாகும்.
இந்த வைட்டமின் குறைபாடு கடுமையான உடல்நல விளைவுகளுக்கு வழி வகுக்கும், எனவே இதற்காகப் பெரும்பாலும் ஊட்ட குறைநிரப்பு மருந்துகள் தேவைப் படுகிறது.