மெத்தில் பாரத்தியான் பூச்சிக்கொல்லி தொடர்பான வழிகாட்டுதல்
September 26 , 2026 5 days 79 0
இத்தாலியின் ரோமில் நடைபெற்ற கூட்டத்தில், ரோட்டர்டாம் மாநாட்டின் வேதியியல் ஆய்வுக் குழு (CRC-22), மெத்தில் பாரத்தியான் என்ற பூச்சிக்கொல்லி தொடர்பான முடிவு வழிகாட்டுதல் ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
மெத்தில் பாரத்தியான் என்பது தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லியாகும்.
இது மனிதர்கள், பறவைகள், தேனீக்கள் மற்றும் நீர்வாழ் விலங்குகளுக்கு அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது.
பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மெத்தில் பாரத்தியான் அடங்கிய பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை ஏற்கனவே தடை செய்துள்ளன.
இந்த வழிகாட்டுதல் ஆவணம் இறுதி முடிவுக்காக உறுப்பினர் நாடுகளின் மாநாட்டிற்கு (COP) அனுப்பப் பட்டுள்ளது; ஒப்புதல் அளிக்கப்பட்டால், சர்வதேச வர்த்தகத்திற்கான முன் அறிவிக்கப்பட்ட ஒப்புதல் (PIC) நடைமுறையின் கீழ் மெத்தில் பாரத்தியான் கொண்டு வரப் படும்.