இந்திய இராணுவமானது பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் (DRDO) உருவாக்கப்பட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட மென்பொருளால் நிர்ணயிக்கப்பட்ட வானலைகளை / ரேடியோக்களை (SDR) வாங்க உள்ளது.
இந்த SDR பாதுகாப்பான, நிகழ்நேரத் தகவல்தொடர்புக்காக உயர் தரவு விகிதங்கள் மற்றும் மைய அணுகல் முனையம் அல்லாத வலையமைப்பு (MANET) திறன்களைக் கொண்டுள்ளன.
தகவல்களைச் சார்ந்த, வலையமைப்பினை மையமாகக் கொண்ட போர்க்களங்களில் SDR-கள் இராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தும்.