மெல்யே-அமிலி – புளிக்கச் செய்யப்பட்ட மூங்கில் குருத்து
December 18 , 2024 223 days 267 0
மெல்யே-அமிலி கொண்டுள்ள உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் ஆனது, எடையினைச் சீராகப் பேணுவதற்கும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான இயற்கையான உணவுத் தீர்வினை வழங்குகிறது.
இது திரிபுராவின் பாரம்பரிய புளிக்கச் செய்யப்பட்ட மூங்கில் குருத்து வகையாகும்.
வட கிழக்கு இந்தியாவில், சில சமூகத்தினர் மூங்கில் குருத்துகளை மிக நன்கு புளிக்க வைப்பதற்காக வேண்டி சில தனித்துவமான முறைகளை உருவாக்கியுள்ளனர் என்ற நிலையில் இந்தத் தனித்துவமான முறைகள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை மேம்படுத்துகின்றன.