மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் ஒன்பது புதிய இனங்கள்
March 18 , 2026 3 days 94 0
இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI), மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேக மலை வனவிலங்கு சரணாலயத்தில் நடத்திய ஆய்வின் போது ஒன்பது புதிய விலங்கினங்களைக் கண்டறிந்தது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இனங்களில் ஸ்டீனேலூரில்லஸ் மேகமலை (குதிக்கும் சிலந்தி), எட்மண்ட்சுலா மேகமலைஎன்சிஸ் (விரைந்தழியும் பூச்சிவகை), த்ரௌலஸ் வெள்ளிமலைஎன்சிஸ் (விரைந்தழியும் பூச்சிவகை), புரோட்டோஸ்டிக்டா சோலை (ஊசித் தட்டான்), அலாக்டா வெள்ளிமலை (கரப்பான் பூச்சி), மற்றும் லாசெசில்லா வெள்ளிமலை (மரப்பட்டை பேன்) ஆகியவற்றுடன் இதர புதிய முதுகெலும்பற்ற உயிரினங்களும் அடங்கும்.
இந்த ஆய்வில் 21 விலங்கினக் குழுக்களில் 977 இனங்கள் பதிவு செய்யப்பட்டன என்ற நிலையில், இதில் சுமார் 511 முதுகெலும்புள்ளவை (286 பறவைகள், 97 ஊர்வன, 77 பாலூட்டிகள், 36 நீர்நில வாழ்விகள் மற்றும் 15 மீன்கள்) மற்றும் 466 முதுகெலும்பற்றவை அடங்கும்.
இந்த சரணாலயம், 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமான ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும் என்ற நிலையில்இது சுமார் 1,016 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பல உயிர் இனங்கள் நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை அளவிட உதவும் 'உயிரியல் குறிகாட்டிகளாக' செயல்படுகின்றன.