TNPSC Thervupettagam
May 1 , 2025 20 days 73 0
  • இந்தியக் கடற்படையானது மேகயான் 25 எனப்படும் 3வது வானிலை மற்றும் கடல்சார் கருத்தரங்கினைத் தொடங்கியுள்ளது.
  • மேகயான்-25 என்பது உலக வானிலை அமைப்பின் (WMO) கீழ் தொடங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு முதன்மையானப் பருவநிலைக் கண்காணிப்பு மற்றும் தரவுப் பகிர்வு முன்னெடுப்பாகும்.
  • இது உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதை நினைவு கூர்வதற்காகவும், 2025 ஆம் ஆண்டிற்கான WMO தினத்தினை (ஆண்டுதோறும் மார்ச் 23 அன்று கொண்டாடப் படுகிறது) கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியுமாகும்.
  • 2025 ஆம் ஆண்டு WMO தினத்துடன் சேர்த்து நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கின் கருத்துரு, ‘Closing the Early Warning Gap Together' என்பதாகும்.
  • இது கடற்படை பெருங்கடல் ஆய்வியல் & வானிலை இயக்குநரகம் (DNOM) மற்றும் SAC-ISRO ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாக MOSDAC-IN எனும் வலைதளச் சேவைகள் தொடங்கப்பட்டன.
  • இந்தியக் கடற்படையானது, 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு “சாகர்மாந்தன்” எனும் தனது தொழில்முறை இதழை அதன் 10வது பதிப்புடன் மீண்டும் வெளியிடத் தொடங்கியுள்ளது.
  • WMO ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு முகமையாகும்.
  • இது வானிலை, செயல்பாட்டு நீரியல், பருவநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • 1873 ஆம் ஆண்டு வியன்னா சர்வதேச வானிலை காங்கிரஸில் நிறுவப்பட்ட சர்வதேச வானிலை அமைப்பிலிருந்து (IMO) WMO உருவானது.
  • 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று மிக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட WMO அமைப்பின் தலைமையகமானது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமைந்து உள்ளது.
  • இது 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்