April 8 , 2026
4 days
77
- செயற்கைக்கோள் இணைய சேவைகளை மேம்படுத்துவதற்காக மேகாலயா மாநில அரசானது ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து ஸ்டார்லிங்குடன் இணைந்த மூன்றாவது மாநிலமாக மேகாலயா உருவெடுத்துள்ளது.
- செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதியை வழங்க 2019 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் ஸ்டார்லிங்க் தொடங்கப்பட்டது.
- செயற்கைக்கோள் இணையமானது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (LEO) உள்ள செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, கம்பிகள் இன்றி இணைப்பை வழங்குகிறது.
- இது தொலைதூரப் பகுதிகளை இணைக்கவும், பேரிடர் காலங்களில் தடையற்ற சேவையை வழங்கவும் உதவுகிறது.

Post Views:
77