மேக விதைப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது.
மழைப் பொழிவை தூண்டக்கூடிய மின் அதிர்ச்சியை மேகங்களுக்கு வழங்கச் செய்வதற்காக வேண்டி மேங்களுக்குள் பறக்கக் கூடிய ஆளில்லா விமானங்களை பிரயோகிக்கும் ஒரு புதிய முறையை ஐக்கிய அரபு அமீரகம் தற்போது சோதித்து வருகிறது.
மேக விதைப்பு என்பது செயற்கையான மழைப்பொழிவை ஏற்படுத்துவதற்கான ஒரு வகையான வானிலையை மாற்றும் தொழில்நுட்பமாகும்.
வானிலை அறிவியலாளர் பெர்னார்டு வன்னேகட் இந்தத் தொழில்நுட்பத்தின் ஒரு முன்னோடி ஆவார்.
வளிமண்டலத்தில் முன்கூட்டியே மேகங்கள் உருவாகி இருக்கும் போது மட்டுமே இந்த தொழில்நுட்பம் செயல்படும்.
இந்த மழைக்கான விதைகள் ஆனது சில்வர் அல்லது பொட்டாசியம் அயோடைடுகள், உலர் பனி (திட கார்பன் டை ஆக்சைடு) அல்லது திரவ புரோப்பேன் ஆகியவையாக இருக்கலாம்.
இவை விமானத்திலிருந்தோ அல்லது தரையிலிருந்தோ மேகத்தின் மீது தெளிக்கப் படும்.