சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவிலான மென்மையான உரோமம் கொண்ட நீர்நாய்கள் (லுட்ரோகேல் பெர்ஸ்பிசில்லாட்டா) இருப்பதை ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த உயிரினமானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் என வகைப்படுத்தப் பட்டு உள்ளதுடன், 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
மென்மையான உரோமம் கொண்ட நீர்நாயானது தெற்காசியாவின் மிகப்பெரிய நீர்நாய் இனமாகும்.
இது ஆரோக்கியமான நன்னீர்ச் சூழலியல் அமைப்புகளைப் பெரிதும் சார்ந்துள்ளது.
நீர்நாய்கள் சிறந்த பகுதி-நீர்வாழ் வேட்டையாடும் விலங்குகள் ஆகும், அவை மீன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆற்று உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
நீர்நாய்களின் இருப்பானது நல்ல நீரின் தரம் மற்றும் ஒப்பீட்டளவில் தலையீடு இல்லாத ஆற்று வாழிடங்களைக் குறிக்கிறது.
மேட்டூர் அருகிலுள்ள காவிரி ஆற்றுப் பகுதியானது மணல் திட்டுகள், தாவரப் பரவல் மற்றும் நீர்நாய்களுக்கு அதிக அளவிலான மீன் இறைச்சி போன்ற சிறப்பான சூழல்களை வழங்குகிறது.
வாழிட இழப்பு, மணல் கொள்ளை, மாசுபாடு மற்றும் மீன் வளங்களின் குறைவு ஆகியவற்றின் காரணமாக இந்த இனம் முக்கியமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.