மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகள் 2025 – தமிழ்நாடு
May 10 , 2025 4 days 36 0
+2 தேர்வுகளுக்கான ஒட்டு மொத்தத் தேர்ச்சி சதவீதம் 95.03% ஆகப் பதிவாகியுள்ளது.
இதில் மாணவ மற்றும் மாணவியர்கள் முறையே 96.70 மற்றும் 93.16 சதவீதத் தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் 98.88% உடன் முன்னிலை வகிக்கின்றன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71% மற்றும் அரசு பள்ளிகள் 91.94% தேர்ச்சி விகிதத்தினைக் கொண்டுள்ளன.
அரியலூர் மாவட்டம் (98.82 சதவீதம்), ஈரோடு (97.98), திருப்பூர் (97.53), கோயம்புத்தூர் (97.48), மற்றும் கன்னியாகுமரி (97.01) ஆகியவை இந்த மாநிலத்தில் மிக அதிக தேர்ச்சி சதவீதத்தைப் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களில் அடங்கும்.