மேம்படுத்தக்கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம்
April 30 , 2024 467 days 349 0
ஹிட்டாச்சி பண வழங்கீட்டு சேவை வழங்கல் நிறுவனமானது, இந்தியாவில் மேம்படுத்தக் கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரத்தினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களை எந்த நேரத்திலும் பண மறுசுழற்சி இயந்திரமாக (CRM) மேம்படுத்தலாம்.
இந்தியாவின் முதல் மேம்படுத்தக்கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம் இது ஆகும்.
மேம்படுத்தக் கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம் ஆனது, வங்கிகள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்கவும், அலுவலகம் சாரா இடங்களில் உள்ள பண வைப்பு வசதியை உள்ளடக்கிய தங்கள் சேவைகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.