மேம்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கைபேசி செயலி
November 3 , 2017 2929 days 1129 0
தேசிய சராசரியை விட ஏற்கனவே சிறந்ததாக இருக்கும் தமிழ்நாட்டின் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில், அவசரம் 108 (Avasaram 108) என்ற கைபேசி செயலியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தச் செயலியானது அழைப்பவரின் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து, விரைந்து செல்ல ஆம்புலன்ஸ்களுக்கு உதவும்.
இது, அழைப்பாளர்களிடம் இணையம் இல்லாமலேயே ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழைப்புகளுக்குப் பதிலளிப்பவருக்கு பாதிக்கப்பட்டவரின் இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்த்த ரேகை விவரங்களைக் கொண்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும்.