மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பிற்கான தேசிய திட்டம்
May 15 , 2021 1556 days 616 0
மத்திய அமைச்சரவையானது “மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பிற்கான தேசியத் திட்டம்” (National Programme on Advanced Chemistry Cell (ACC) Battery Storage) எனும் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பு (Advanced Chemistry Cell – ACC) என்பது மின்னாற்றலை மின்வேதி (அ) வேதி ஆற்றலாக சேமித்து வைத்து பிறகு தேவைப்படும் போது அதனை மீண்டும் மின்னாற்றலாக மாற்றத்தக்க புதிய மேம்படுத்தப் பட்ட ஒரு சேமிப்புத் தொழில்நுட்பமாகும்.
இந்திய நாடானது ACC கலங்களின் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக 50 Gwh திறனுடைய ACC மற்றும் 5 Gwh திறனுடைய “பிரத்தியேக” ACC போன்ற அளவில் உற்பத்தித் திறனை அடைவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.