இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இணைப்பு ரக பீரங்கித் துப்பாக்கி அமைப்பினை (ATAGS) வாங்குவதற்கான ஒரு திட்டத்தினை முன் வைத்து உள்ளது.
இதனை உயரமானப் பகுதிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதோடு, திறன் சார்ந்த நடவடிக்கைகளில் உள்ள முக்கியமான இடைவெளிகளை இது நிவர்த்தி செய்யும்.
ஒரு நீண்ட காலத்திற்குப் பராமரிப்பு எதுவும் தேவைப்படாத மற்றும் நம்பகமான செயல்பாட்டினை உறுதி செய்வதற்காக அனைத்து வகை மின்சார இயக்கிகளுடனும் ATAGS கட்டமைக்கப் பட்டுள்ளது.
இது அதிக இயக்கத் திறன், விரைவான நிலை நிறுத்துதல் திறன், துணை மின் அலகு, மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்பு, நேரடித் தாக்குதல் முறையில் இரவுநேரத் தாக்குதலை மேற்கொள்ளும் திறன் கொண்ட தானியங்கி வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.