மேம்பட்ட தரையிறங்கும் மைதானம் @ விஜயநகர், அருணாச்சலப் பிரதேசம்
September 19 , 2019 2133 days 719 0
அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள விஜயநகரில் மேம்பட்ட தரையிறங்கும் மைதானத்தை இந்தியா மீண்டும் திறந்துள்ளது.
மே 1961 முதல் மூலோபாய காரணங்களுக்காக அங்கு குடியேறிய முன்னாள் அசாம் ரைபிள்ஸ் படையின் பணியாளர்களால் விஜயநகர் கட்டுப்படுத்தப் படுகிறது.
இந்த இடம் மியான்மரின் எல்லையில் உள்ளது.
உள்ளூர் லிசு பழங்குடி மக்கள் இந்த இடத்தை டவுடி என்று அழைக்கிறார்கள்.
இந்திய விமானப் படை முதன்முதலில் விஜயநகரில் டகோட்டா மற்றும் ஓட்டர் விமானங்களுடன் 1962 இல் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.
அதிக எடையைத் தூக்கும் போக்குவரத்து விமானங்களான சி-130 ஜே மற்றும் சி-17 ஆகியன தரையிறங்குவதற்கான கூடுதல் ஏற்பாடுகளுடன் தற்போது ஒரு ஏ.என் 32 விமானம் ஆனது தரையிறங்கி உள்ளது.