மேம்பாட்டிற்கான உலக நாடுகளின் உறுதிப்பாடுகள் குறியீடு 2025
November 27 , 2025 16 hrs 0 min 30 0
2025 ஆம் ஆண்டு மேம்பாட்டிற்கான உலக நாடுகளின் உறுதிப்பாடுகள் குறியீட்டில் (CDI) இந்தியா ஒட்டு மொத்தமாக 36வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டை வாஷிங்டன் DC மற்றும் இலண்டனில் உள்ள ஓர் இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான உலகளாவிய மேம்பாட்டு மையம் (CGD) வெளியிட்டுள்ளது.
தனிநபர் உமிழ்வு குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழலில் இந்தியாவின் சிறந்த செயல் திறன் (8வது) பதிவாகியுள்ளது.
இந்தியாவின் பலவீனமான பகுதிகள் வர்த்தகம் (38வது) மற்றும் மேம்பாட்டு நிதி (38வது) ஆகும்.
முதலீடு (31வது), இடம்பெயர்வு (36வது) மற்றும் பாதுகாப்பு (31வது) ஆகியவை குறைந்த தரவரிசைகளில் உள்ள பிற பிரிவுகளில் அடங்கும்.
இந்தியாவின் வருமானம் சரி செய்யப்பட்ட தரவரிசை 29வது இடத்தில் உள்ளது என்ற நிலையில், இது அதன் பொருளாதார அளவுடன் ஒப்பிடும் போது சிறந்ததொரு செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.