மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய தட்டாம்பூச்சி இனங்கள்
July 19 , 2025 73 days 120 0
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் லிரியோதெமிஸ் ஆபிரகாமி என்ற புதிய தட்டாம் பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல தாவரவியலாளர் ஆபிரகாம் சாமுவேலின் நினைவாக இந்த தட்டான்பூச்சிக்கு இப்பெயரிடப் பட்டது.
இது தெற்கு மற்றும் மத்திய மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதன் இருப்பிடமாகக் கொண்டது மற்றும் தாழ்நில மழைக்காடுகள் மற்றும் நடுத்தர உயரப் பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது.
இதன் கூடுதலாக தற்போது கேரளாவின் ஓடனேட் வகை (தட்டான்பூச்சிகள் மற்றும் ஊசித் தட்டான்கள்) இனங்களின் எண்ணிக்கையானது சுமார் 191 ஆக உயர்ந்துள்ளது என்பதோடு இவற்றில் 78 இனங்கள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.