மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய பெருஞ்சிலந்தி இனங்கள்
January 21 , 2025 186 days 221 0
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு புதிய பேரினம் உட்பட நான்கு புதிய வகை பெருஞ்சிலந்தி இனங்களை/டரான்டுலாக்களை ஆராய்ச்சியாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
சிலந்திக்கான தமிழ்ச் சொல்லினைக் கொண்டு பெயரிடப்பட்ட சிலந்திகா எனப்படும் டரான்டுலா முற்றிலும் புதிய வகையாகும்.
ஹாப்லோக்ளாஸ்டஸ் பிராட்டோகொலோனஸ் ("மரத்தில் வசிக்கும் இனம்" என்று பொருள்படும்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டாவது புதிய இனம் ஆனது, ஆறுகளின் ஓரங்களில் உள்ள உள் வெற்றிடம் கொண்ட மரங்களில் வசிப்பிடங்களை உருவாக்குகின்றது.
மற்றொரு இனமான ஹாப்லோக்ளாஸ்டஸ் மொன்டனஸ், மலைக் காடுகளில் 2,000 மீட்டர் (6,600 அடி) க்கும் அதிகமான உயரத்தில் வாழ்வது கண்டறியப்பட்டது.
இது இப்பகுதியில் அறியப்பட்ட மிக உயரமான இடத்தில் வாழும் டரான்டுலாக்களில் ஒன்றாகும்.
சுமார் 1,264 காற்றை சுவாசிக்கும் எண்காலி இனங்கள் தற்போது உலகளவில் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.