TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிக்கான அறிவிப்பு

August 1 , 2026 23 days 81 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையானது சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிக்கான (ESA) வரைவு அறிவிப்பை, முந்தைய வரைவு இறுதி முடிவின்றி காலாவதியானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி (ESA) குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 56,825.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாகும்.
  • இறுதி அறிவிப்பை வெளியிடுவதை மத்திய அரசு பரிசீலிக்கும் முன்னர், இந்த வரைவு 60 நாட்களுக்குப் பொதுமக்களின் ஆட்சேபனைகளுக்காகத் திறந்திருக்கும்.
  • இது அறிவிக்கப்பட்டால், ESA-க்குள் சுரங்கம், குவாரி, மணல் அள்ளுதல், புதிய அனல் மின் நிலையங்கள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றைத் தடை செய்யும்.
  • சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்த ஆறு மாநிலங்களுடனான வேறுபாடுகள் மற்றும் விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கவலைகள் காரணமாக இந்த முன்மொழிவு 2011 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்