மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடம்
January 11 , 2021 1666 days 725 0
மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடத்தின் 306 கி.மீ நீளமுள்ள புதிய ரெவாரி - புதிய மதார் என்ற பிரிவை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய பாதையானது ராஜஸ்தானின் மதார் மற்றும் ஹரியானாவின் ரெவாரி பகுதிகளுக்கு இடையேயான வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படும்.
இந்த நிகழ்வின் போது, 1.5 கி.மீ நீளமுள்ள உலகின் முதல் இரட்டை அடுக்கு கொண்ட சரக்குப் பெட்டக இரயிலையும் பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார்.
இது ஹரியானாவின் அட்டெலி முதல் ராஜஸ்தானின் கிஷன்கர் வரை மின்சார இழுவை மூலம் இயக்கப் படுகிறது.
மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடமானது உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி முதல் மகாராஷ்டிராவின் மும்பை வரை செல்கிறது.
இந்தப் பாதையானது உத்தரப் பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது.
மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடமானது உத்தரப் பிரதேசத்தின் குர்ஜாவில் கிழக்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடத்தைச் சந்திக்கிறது.