December 21 , 2025
15 hrs 0 min
16
- மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை முன்மொழியும் மேற்கு வங்காள சட்டமன்ற திருத்த மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து உள்ளார்.
- ஆளுநர் டாக்டர் C. V. போஸ் இந்த மசோதாவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கியிருந்தார்.
- அலியா பல்கலைக்கழகம் தொடர்பான மற்றொரு திருத்த மசோதா, முதல்வரை அமீர்-இ-ஜாமியா அல்லது வேந்தராக முன்மொழியும் மசோதாவும் நிராகரிக்கப்பட்டது.
- தற்போதுள்ள விதிகள் மாறாமல் உள்ளதுடன், தற்போதைய சட்ட கட்டமைப்பின் கீழ் ஆளுநர் வேந்தராக தொடர்கிறார்.
- இந்த மசோதாக்கள் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை வேந்தராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன, ஆனால் அந்த முன் மொழிவுகள் அங்கீகரிக்கப்படவில்லை.

Post Views:
16