TNPSC Thervupettagam

மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்பு நிறுவல்கள்

December 22 , 2024 210 days 213 0
  • பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தின் கீழ், குஜராத், மகாராஷ்டிரா, மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை மிக அதிக எண்ணிக்கையிலான மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்பின் நிறுவல்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ், இந்த நிறுவல்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் எண்ணிக்கையினைத் தாண்டும் எனவும், அக்டோபர் மாதத்திற்குள் 20 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருமடங்காக உயரும் எனவும், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 லட்சம் எண்ணிக்கையினை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • இன்றுவரை நிறுவப்பட்டுள்ள மொத்த நிறுவல்களில் சுமார் 88 சதவீதமானது ஆறு மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன.
  • 55,000க்கும் மேற்பட்ட நிறுவல்களுடன் கேரளா நான்காவது இடத்திலும், 21,000க்கும் மேற்பட்ட நிறுவல்களுடன் தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து 20,000க்கும் அதிகமான நிறுவல்களுடன் இராஜஸ்தானும் இதில் இடம் பெற்றுள்ளது.
  • இந்தத் திட்டம் 1,000 பில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை 720 மில்லியன் டன்கள் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்