TNPSC Thervupettagam

மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீடு - 5வது சுற்று

April 14 , 2023 843 days 361 0
  • 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் நாடு முழுவதும் உள்ள புலிகள் வளங் காப்பகங்களை மதிப்பிடச் செய்வதற்கு அரசாங்கம் மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீட்டினைப் பயன்படுத்துகிறது.
  • கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் வளங்காப்பகம் (PTR) ஆனது நாட்டிலேயே சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் புலிகள் வளங்காப்பகமாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு 5வது சுழற்சி மதிப்பீட்டில், சாத்புரா (மத்தியப் பிரதேசம்) மற்றும் பந்திப்பூர் (கர்நாடகா) ஆகியவை இரண்டாவது இடத்தையும், நகர்ஹோலே (கர்நாடகா) மூன்றாவது இடத்தையும் பெற்றன.
  • இது வரை 53 புலிகள் வளங்காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த 53 புலிகள் வளங்காப்பகங்களில் 51 மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டன.
  • இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு புலிகள் வளங்காப்பகங்களான ராம்கர் விதாரி மற்றும் இராணிப்பூர் ஆகியவை இந்த மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீட்டின் தற்போதையச் சுற்றில் சேர்க்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்