TNPSC Thervupettagam
June 9 , 2026 5 days 102 0
  • விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் நாசா, செவ்வாய் வளிமண்டலம் மற்றும் ஆவியாகும் பொருட்களின் பரிணாமம் (MAVEN) விண்கலத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
  • மேவன் விண்கலம் ஆனது 2013 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
  • செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம் மற்றும் அதன் வளிமண்டல இழப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் விண்கலத் திட்டம் இதுவாகும்.
  • விண்கலம் பாதுகாப்பான பயன்முறைக்கு மாறி, அதன் பேட்டரிகள் தீர்ந்ததை அடுத்து, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப் பட்டது.
  • காலப்போக்கில் செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தின் பெரும்பகுதியை எவ்வாறு இழந்தது என்பதை அறிவியலாளர்கள் புரிந்து கொள்ள மேவன் உதவியது.
  • இத்திட்டம் 800-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளுக்கான தரவுகளை உருவாக்கி ள்ளது மற்றும் செவ்வாய் கிரக உலாவிகளின் தகவல் தொடர்புகளுக்கு ஆதரவளித்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்