மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் - 5,000 அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி
August 28 , 2019 2207 days 589 0
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு 5000 அரசு ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக் கணினித் திறன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த திட்டமானது நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.
‘டிஜிட்டல் நிர்வாக தொழில்நுட்பச் சுற்றுலா’ என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது நேரடி மற்றும் மெய்நிகர் பட்டறைகளைக் கொண்டிருக்கும்.
இது பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட அரசுத் துறைகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும்.