மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டின் சிறந்தப் பங்குதார நிறுவன விருதுகள் 2022
July 9 , 2022 1199 days 534 0
HCL டெக்னாலஜிஸ் நிறுவனமானது, மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தீர்வுகளைச் செயல்படுத்தச் செய்வதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டின் சிறந்தப் பங்குதார நிறுவன விருது வழங்கும் விழாவில் (2022) விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.
சுகாதார நலன் மற்றும் வாழ்வியல் அறிவியலுக்கான (உலகளாவிய வெற்றியாளர்) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டின் சிறந்தப் பங்குதார நிறுவன விருதினையும், 2022 ஆம் ஆண்டுக்கான UK மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டின் சிறந்தப் பங்கு தார நிறுவன விருதையும் (நாட்டின் வெற்றியாளர்) HCL டெக் நிறுவனம் பெற்றது.
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பிரிவிலும் (இப்பிரிவிற்கான இறுதி வெற்றியாளர்) 2022 ஆம் ஆண்டிற்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டின் சிறந்தப் பங்குதார நிறுவன விருது வழங்கும் விழாவில் இந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இறுதிப் போட்டியாளராகவும் அறிவிக்கப்பட்டது.